Uncategorized

துசிடிடிசின் பொறி (Thucydides Trap)

எப்பொழுதெல்லாம் ஒரு வல்லரசு நாட்டுக்கு போட்டியாக இன்னொரு நாடு ஏறுமுகமாக வளர்கிறதோ, அப்பொழுதெல்லாம் அவ்விரு நாடுகளுக்கிடையே போர்கள் ஏற்படுகின்றன. இது மனிதனின் அடிப்படை உளவியல் என்கிறார் 2500 வருடங்களுக்கு முன்தோன்றிய புகழ்பெற்ற முதல் வரலாற்றாசிரியர் துசிடிடிசு. கடந்த 500 வருட வரலாற்றில் இதுபோன்ற நிலை 16 முறை ஏற்பட்டிருக்கிறது. அதில் 12 முறை போர்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதில் இரண்டு உலகப்போர்களும் அடக்கம். இப்பொழுது அதே நிலை அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்டிருக்கிறது. இந்தப்பொறியிலிருந்து இவ்வுலகம் தப்பிக்குமா என்பது தெரியவில்லை. அவ்வாறு தப்பிப்பதற்கு அடிப்படைத்தேவை இப்படி ஒரு பொறி இருக்கிறது என்று உணர்வது முக்கியம். கிரகாம் ஆலிசன் இதை அருமையாக […]

Continue Reading →

பிரபாகரன் சட்டகம்: புலிகளின் உத்திகள்

தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம்  என்ற நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு அளிக்கிறேன். தமிழகத்தின், ஈழத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல். பிரபாகரன் சட்டகம்: புலிகளின் உத்திகள் புலிகளின் உத்திகளைப் பற்றி ஒருவருடன் இணையத்தில்  உரையாடும்பொழுது அவர் “புலிகள்தான் தோற்றுவிட்டார்களே, அப்படி என்றால் அவர்களின் உத்திகள் சரியில்லை என்றுதானே பொருள்” என்று கூறினார். இதுபோன்ற கருத்துக்கள் உத்திகளைப் பற்றிய எளிமையான பார்வையினால் உருவாவது. நாம் உலகிலேயே சிறந்த உத்திகளைப் பயன்படுத்தினாலும், அது நமது வாய்ப்புகளைத் தான் கூட்டமே ஒழிய உறுதியாக வெற்றியடைவோம் என்ற உறுதியைத் தரமுடியாது. அதுபோன்ற நிலைதான் புலிகளுக்கு ஏற்பட்டது. புலிகளைப் பற்றி பலர் உணராதது […]

Continue Reading →

குழுக்களின் குழு: தமிழ்தேசியத்திற்கான ஒரு மறுசீரமைப்பு

பல நூற்றாண்டுகளாக பொதுவாக  ஓர் அமைப்பின் செயல்பாடு என்பது  தலைவர், துணைத்தலைவர்கள், தொகுதித்தலைவர்கள், அடிமட்ட  உறுப்பினர்கள் என  பல அடுக்குகளைக் கொண்டு செயல்படும்.  திட்டமிடல் கட்டளைகள் ஆகியன தலைமையால் மேற்கொள்ளப்பட்டு, கீழே அது படிப்படியாக விரிவாக்கப்பட்டு, அடிமட்ட உறுப்பினர்களால்    செயல்படுத்தப்படும். ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக  இது கேள்விக்குட்படுத்தப்பட்டு  பல முன்னணி அமைப்புகளின் செயல்பாடுகள்  தலை கீழாக மாற்றப்பட்டு   ஒரு “குழுக்களின் குழு” என்ற ஒரு புதிய முறை பயனுக்கு வர ஆரம்பித்துள்ளது.  இம்முறையில் ஓர் அமைப்பின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும். ஒரு சிறு குழுவால் பன்மடங்கு பலம்வாய்ந்த எதிரிகளை எதிர்த்து வெற்றிகொள்ள முடியும். இம்முறையை அமேரிக்கா,  இங்கிலாந்து, […]

Continue Reading →

தேவை ஒரு தமிழ்த்தேசிய அறிவாயம்

அண்மையில் அண்ணன் ஆழி செந்தில்நாதன் அவர்களுடன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்த்தேசியத்திற்கு என்று  ஒரு அறிவாயத்தை (Think Tank) உருவாக்கவேண்டும் என்ற கனவினை என்னிடம் தெரியப்படுத்தினார். இது தொடர்பாக அவருடனும் மேலும் சில நண்பர்களுடனும், குறிப்பாக செ. இரா. செல்வக்குமார், Sam Vijay, வித்தியாசகர், Hv. Vichu  [1] அவர்களுடன்  நேரடி சந்திப்பும் முகநூல் விவாதங்களும் நடந்தன.  இந்த கருத்தாடல்களின்  விளைவுதான் இக்கட்டுரை. ஓர்  உயிரோ, அமைப்போ, அல்லது சமூகமோ பிழைக்கவேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிய  அறிவியல்  பார்வை கடந்த சில பத்தாண்டுகளில் வெகுவாக  மாறிவிட்டது. வலியது வெல்லும் என்பதெல்லாம் தவறான பார்வை. தக்கது எஞ்சும் என்ற […]

Continue Reading →